தலைமறைவான திருவள்ளூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்!

0
10
Varna News | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News | Tamilnadu News | Latest Tamilnadu News in Tamil | Tamil Flash News | Latest Tamil News | Breaking News in Tamil

தலைமறைவான திருவள்ளூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்!

சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி தலைமறைவானதாக சிலை கடத்தல் தடுப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அடுத்த ஆலடிப்பட்டி என்ற கிராமத்தில் பாதிரியார் ஞான அன்பு என்பவர் இடத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த மதுரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக இருந்த காதர் பாஷா மற்றும் தலைமை காவலராக பணியாற்றிய சுப்புராஜ் ஆகியோர் ஞான அன்புவை மிரட்டி சிலைகளை சென்னைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டனர். 

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை வந்தனர். இந்நிலையில்,, வழக்கில்  தொடர்புடைய கோயம்பேடு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுப்புராஜை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். 

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய தற்போது திருவள்ளூர் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் காதர் பாஷாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கைது செய்ய முயலும்போது டிஎஸ்பி தலைமறைவானார். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தலைமறைவான டிஎஸ்பி காதர் பாஷாவை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here