அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை தங்க தமிழ்செல்வன்

0
814

அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை தங்க தமிழ்செல்வன்

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை நீட் தேர்வு உதய் மின் திட்டம் மற்றும் தமிழக விவசாயத்தை பாதிக்கும் மத்திய அரசு திட்டங்களை எதிர்க்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை மத்திய அரசின் மிரட்டலுக்கு அண்ணா திமுக அரசு அடிபணிந்து உள்ளது

என்பது தமிழக மக்கள் எண்ணம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் தமிழக மக்கள் மிகப்பெரிய பாடம் புகட்டுவார்கள் மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அடிபணியாமல் எதிர்த்திருந்தால்  அண்ணா திமுக வில் இருந்து நாங்கள் பிரிந்து வந்திருக்க மாட்டோம்

மோடியின் கட்டளைகளுக்கு வளைந்து போகும் போக்கு பிடிக்காமல் தான் பிரிந்து வந்து நாங்கள் உண்மையானது என்பதை நிரூபித்துள்ளோம்  அம்மா மக்கள் முன்னேற்ற கலகம் கருத்துக்கணிப்பில் அவர்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும் ஆட்சி எங்களிடம் தான் வரும் 90% தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் அண்ணா திமுக மனந்திருந்தி எங்களிடம் வாருங்கள் இருவரும் சேர்ந்து அதிமுக இரட்டை இலை கையிலெடுத்து ஆட்சி செய்வோம்

அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை அதிமுக அரசின் அதிகாரபலம் போன்ற நாடகம் எல்லாம் தேர்தலில் தமிழக மக்களிடம் எடுபடாது

ஜெயலலிதா கருணாநிதி மறைவிற்கு பின் நல்ல செல்வாக்கு மிகுந்ததாக  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வளர்ந்துள்ளது நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரும்பும் முடிவு எங்களுக்கு சாதகமாக உள்ளது

அதன் பிறகு தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சி உள்ளது தொழிற்சாலையில் முதலீடுகளில் அரசுக்கு வருவாய் தமிழக மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு ரொக்கம் எங்கிருந்து கொடுத்தீர்கள் கஜானாவில் இருந்து எடுத்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூறும் கோரிக்கைகளை ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் ஆற்றல் மிக்க அரச செயல்பட தெரியவில்லை

மத்திய அரசின் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அதிமுக அரசு உள்ளது நாடாளுமன்ற கூட்டணி இன்னும் முடிவாகவில்லை இதற்கிடையில் பிரதமரை போட்டி போட்டு அதிமுக அமைச்சர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்

இதனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி  வைத்தே ஆக வேண்டும் வருகிற  தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய பாடம் புகட்டுவார்கள் நேர்மையாக செயல்படும் அமமுக விற்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் அளிப்பார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் ராமநாதபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here