வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி.தினகரன் உறுதி

0
245

வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி.தினகரன் உறுதி

பரமக்குடியில் இன்று நடைபெற்ற சமூக வலைதள ஆர்வலர்கள் கூட்டத்தில்…
அமமுக-வின் கொள்கை என்பது அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டுவந்தார்களோ அவற்றை செயல்படுத்துவதும் அவரின் கனவான VISION 2023ல் சொல்லப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றித்தருவதும் தான்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஏழை எளியோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை செயல்படுத்துவோம். மிக முக்கியமாக நமது நாட்டின் முக்கியத் தொழிலான விவசாயம் மீண்டும் செழிப்புற அதற்கான நீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் நீர் மேலாண்மை செம்மைபடுத்தப்படும்.

விவசாயம் சார்ந்த தொழில்களை பெருக்கி, சுற்றுச்சூழல் பாதிக்காத தொழிற்சாலைகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். தனியாருக்கு இணையாக அரசின் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் தரம் உயர்த்தப்படும்.

பெண்களின் மிக முக்கிய கோரிக்கையான பூரண மது விலக்கை நிறைவேற்றும் விதமாக அம்மாவின் வழியில் மது கடைகளை படிப்படியாக குறைத்து முழுமையான மது விலக்கை கொண்டு வருவோம்.

சிறுபான்மையின மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் ஓர் பாதுகாப்பு அரணாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் இருந்திடும். எனது வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here