இந்தியாவில் ஃபவி பிராவிர், ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்

0
4

இந்தியாவில் ஃபவி பிராவிர், ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு, தோல் நோயை குணப்படுத்தும் டோலிசுமாப் மருந்தை வழங்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, டோலிசுமாப் மருந்தை வழங்க, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மருந்தானது தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும். மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதால், மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருந்தின் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே இந்தியாவில் ஃபவி பிராவிர், ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here