அடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா? அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்!

0
243

அடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா? அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்!

380 கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் அரசியல் ஆலோசனைகளை பெற்று வருகிறது திமுக.

சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் திமுகவை முன்னிலை படுத்தியும் மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டியும் பல்வேறு விமர்சனங்கள் ஐபேக் நிறுவனத்தால் பரப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இதுபோன்ற புதிய அரசியல் அணுகுமுறைகளால் மற்ற கட்சிகளும் அரசியல் ஆலோசகரை நியமிக்கவும் திட்டம் தீட்டி வருகின்றன.

ஆனால் வலைத்தள குறும்பர்கள் (நெட்டிசன்கள்)ஐபேக் நிறுவனத்தின் முயற்சிகளை பெரும்பாலும் தன்னிச்சையாகவே முறியடித்து விடுவதால் செய்வதறியாது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திணறி வருகிறது.

ஆம் ஆட்சிக்கு வரும் முன்னே உடன்பிறப்புக்கள் செய்துவரும் அட்டூழிங்களால் பொதுமக்களின் தொடர் கோபத்தை திமுக சம்பாதித்து வருகிறது.

தினம்தோறும் கொலை, கொள்ளை,கற்பழிப்பு,மதுபானம் கடத்தல்,அடிதடி,ஆள்கடத்தல்,வழிப்பறி என்கிற செய்திகளில் கட்டாயமாக உடன்பிறப்புக்கள் பெயரும் திமுகவும் இடம்பெற்று விடுகிறது.

நாம் ஆட்சிக்கெதிராக ஒரு விமர்சனத்தை முன்வைத்து கொண்டிருக்கும்போதே உங்கள் கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் நாங்கள் எப்படி உங்களை வெற்றி பெற வைப்பது? என்று ஸ்டாலினிடமே நேரடியாக கேட்டுவிட்டாராம் பிரசாந்த் கிஷோர்.

திமுக தலைவரோ கலைஞர் காலத்தில் இருந்தே இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அப்போது பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் இல்லை அதனால் பல பிரச்னைகள் வெளியே தெரியவில்லை.

அதனால் இப்போதைய சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு நடந்துக்கொள்ள தெரியவில்லை.நீங்கள் அரசின் மீதான விமர்சனங்களை மட்டும் பாருங்கள். பெரும்பாலான ஊடகங்கள் நம் கைவசம் இருக்கிறது அவற்றின் மூலம் இவற்றை திசை திருப்பிவிடலாம் என்று ஆறுதலடைந்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்நிலையில் நெட்டிசன்கள் கூகிளின் துணையுடன் திமுகவை கலாய்த்து வருகிறார்கள்.

கூகிளில் Dmk Attack என டைப் செய்தால் திமுகவின் பஜ்ஜிக்கடை, பிரியாணிகடை, டீகடை,பியூட்டி பார்லர் உள்ளிட்ட பல தாக்குதல்களை பட்டியலிடுகிறது கூகிள்.அதை ஸ்கிரின்சாட் எடுத்துபோட்டு திமுகவை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஐபேக் நிறுவனமோ கூகிளில் இருந்து இந்த பட்டியல்களை எப்படி நீக்குவது என்று தலையை பிய்த்து கொண்டுவருகிறது.

உடன்பிறப்புக்களோ சம்பந்தமே இல்லாமல் கூகிளின் முதன்மை அதிகாரி சுந்தர் பிச்சையை திட்டி தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here