தமிழகத்தில் காலூன்ற பாஜக போட்ட ப்ளான் சக்ஸஸ்…

0
84

தமிழகத்தில் காலூன்ற பாஜக போட்ட ப்ளான் சக்ஸஸ்…

தமிழகத்தில் காலூன்ற, அதிமுக நிர்வாகிகள் மூலம் பாஜக மெகா திட்டம் வெற்றியடைந்துள்ளதாக தமிழக பாஜக வட்டாரத்தில இருந்து தகவல் கசிந்துள்ளது.

தமிழகத்தில் தங்களுடைய கட்சியை பலப்படுத்துவதற்காக பாஜகவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு கிடைத்தது என்னவே ஏமாற்றம் தான்.

இதனால், கட்சி தலைமை இல்லாத அதிமுகவை வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவையானவற்றை செயல்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில், கட்சியை பலப்படுத்துவதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர்களை வளைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

அதில் முதல் பலியாக இருக்கப் போவது, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சசிகலாவின் ஆணி வேராக திகழ்ந்த நயினார் நாகேந்திரன் தான் என்கிறது பாஜக வட்டாரம்.

இவர் 1989-ல் இருந்து அதிமுகவில் படிப்படியாக முன்னேறி, ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் பதவியை பெற்றவர். 2001-ல் நெல்லையில் போட்டியிட்டு அமைச்சராக பதவியேற்ற இவர், 2011-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர், சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டதும், முதல் அறிவிப்பிலேயே கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக நயினாரை நியமித்தார்.

சசிகலா சிறைக்கு சென்றதும் அமைதியாக ஒதுங்கி இருந்த நயினாரிடம், பொன்.ராதாகிருஷ்ணனிடமும், தொடர்ந்து டெல்லி மேலிடத்திடமும் பேசியுள்ளாராம்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் அவர் பாஜகவில் இணையலாம், என்று நயினாரின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனால், தங்களது திட்டம் சக்ஸஸ் ஆனதால் தமிழக பாஜகவினர் குதூகலத்தில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here