தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. பாஜகவின் கரிசனம் தினகரன் மீது பாய்கிறதா..? ஏண்டா இத செஞ்சோம்… தலைதலையாய் அடித்து புலம்பும் எடப்பாடி..!!

0
283

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. பாஜகவின் கரிசனம் தினகரன் மீது பாய்கிறதா..? ஏண்டா இத செஞ்சோம்… தலைதலையாய் அடித்து புலம்பும் எடப்பாடி..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா தமிழக அரசை அவமதிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக சேலம் மாவட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் ஆறு பேரை தேசத்துரோக வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தினகரன் மீதும் வழக்கு பாய்ந்தது. சசிகலா வெளியே வருவதற்குள் தினகரன் உள்ளே போக வேண்டும் என்ற திட்டம் போடப்பட்டது.

அந்த சமயத்தில் எந்த நேரத்திலும் தினகரன் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.

ஆட்சிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் தினகரன் கைது செய்யப்படுவார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் வேகமாக பரவியது.

நுணலும் தன் வாயால் கெடும் என்பதை போலவே எடப்பாடி தரப்பின் முடிவு இருந்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடப்பாடி அரசுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் தற்போது தேசத்துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பி.ஜே.பி.யினர் மீது தேசத்துரோகச் சட்டத்தை ஏவி கொடுமைப்படுத்துகிறார்கள்,

அதை நிறுத்த வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மோடி அவர்கள் கோரிக்கை விடுத்ததை இப்போது நினைவுகூர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஆக, தேசத்துரோகச் சட்டத்தை எந்த மாநில அரசு துஷ்பிரயோகம் செய்தாலும் அதை தற்போதைய பிரதமர் மோடி எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்’ என எடப்பாடி பழனிசாமி அரசைக் காட்டமாக விமர்சித்துள்ளது.

பாஜக சில பல சலுகைகளை அதிமுகவிற்கு அளித்திருந்தாலும், எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம், தேசத் துரோக வழக்கு போன்றவற்றில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு இருக்கிறது.

கட்சிக்குள் இருப்பவர்களையே காலை வாரி விட்டவர்கள் நமக்கெதிராகவும் மாற எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பாஜக ஒருபுறம் வைத்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாவே தமிழக பாஜக பெரும்புள்ளிகளின் பேட்டி சுட்டிக்காட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here