கொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு

0
2

கொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி காவலர்களும் விதிவிலக்கல்ல.

சென்னை ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர், நாகராஜ்(31). ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்த போது நாகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார்.

முன்னதாக, சென்னையில் காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் என இரண்டு காவலர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது மூன்றாவதாக காவலர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

COVID-19,Chennai,cop, கொரோனா வைரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here