திரையரங்கு பிரச்னைக்கு விரைவில் நடவடிக்கை அமைச்சர் உறுதி!

0
16

திரையரங்கு பிரச்னைக்கு விரைவில் நடவடிக்கை அமைச்சர் உறுதி!

தமிழக திரையரங்குகளில் கேளிக்கை வரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரியால் தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து திரையரங்குகளில் கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமியும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விரைவில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here