ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிடுவதில்லை – உச்சநீதிமன்றம்

0
26

ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிடுவதில்லை – உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாததைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் உமாபதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் இன்று முறையிட்டார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலை குறித்து எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் தீர்ப்பில் நாங்கள் குறிப்பிட்டது, காவிரி மேலாண்மை வாரியம் இல்லை. “ஸ்கீம்”என்பது காவிரி தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கான “செயல் திட்டம்”என தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வருகிற 9-ந் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Source : fx16tv.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here