இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 19 வயது கோவை இளைஞர்!

0
23
Varna News | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News | Tamilnadu News | Latest Tamilnadu News in Tamil | Tamil Flash News | Latest Tamil News | Breaking News in Tamil

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 19 வயது கோவை இளைஞர்!

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 19 வயது கோவை இளைஞர்!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டவருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட கோவையை சேர்ந்த வீரரை பி.சி.சி.ஐ தேர்வு செய்துள்ளது.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2018ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணி வரும் ஜூலை 14ம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் கோவையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே தென் இந்தியர் இராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை இராம்நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராமன் – ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனான இராதாகிருஷ்ணன், சிறு வயது முதலாக கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், தன்னுடைய 5 வயதில் இருந்து அதற்கான கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டதின் காரணமாகவே இந்த இடத்தை பிடித்துள்ளதாக கூறுகிறார் ராதாகிருஷ்ணனின் தந்தை சுந்தர்ராமன்.

கிரிக்கெட் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை விரைவில் கற்றுக்கொண்டதால், பேட்டிங்கில் திறமைமிக்கவராக ராதாகிருஷ்ணன் திகழ்வதாகவும், அவருடைய பயிற்சியாளர்களில் ஒருவரான குருசாமி தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக இராதாகிருஷ்ணன் அடித்த 65 ரன்கள், ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை கவர்ந்ததாகவும், அதன் அடிப்படையிலே தற்போது இங்கிலாந்து செல்ல உள்ள ஜூனியர் இந்தியன் அணியில் இராதாகிருஷ்ணன் இடம்பெற்று இருப்பதாகவும் கூறினார் பயிற்சியாளர் குருசாமி.

ஆரம்பத்தில் விளையாட்டாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து கொண்டதாகவும் பெற்றோரின் ஊக்கம் மற்றும் பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சியின் காரணமாகவே தற்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார் ராதாகிருஷ்ணன். தமக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக விளங்கிய ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இங்கிலாந்தில் நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here