திமுக சமூக நீதிக்கு அடையாளமா? செருப்பை சுமக்க வைத்த எம்எல்ஏ மீது நெட்டிசன்கள் காட்டம்

0
72

திமுக சமூக நீதிக்கு அடையாளமா? செருப்பை சுமக்க வைத்த எம்எல்ஏ மீது நெட்டிசன்கள் காட்டம்

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில், மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடுவதற்காக, தி.மு.க., எம்.எல்.ஏ., வில்வநாதன், கடந்த 30ம் தேதி சென்றார்.

பாதை சேறும், சகதியுமாக இருந்ததால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலோடு நடந்து சென்றார். அப்போது, வெங்கடசமுத்திரம் ஊராட்சி, தி.மு.க., செயலர் சங்கர், எம்.எல்.ஏ.,வின் செருப்பை கையில் துாக்கி சென்றார்.

இதனிடையே, செருப்பை ஊராட்சி செயலர் கையில் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

பட்டியலினத்தை சேர்ந்தவரை எம்.எல்.ஏ செருப்பு தூக்க வைத்ததாக சர்ச்சை எழுந்ததோடு இதுதான் உங்கள் சமூகநீதியா? என்று திமுகவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் சமூக ஆர்வளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர்.

இது குறித்து ஊராட்சி செயலர் கூறுகையில்,

‘எம்.எல்.ஏ-வைப் பொறுத்தவரை சாதி பார்த்து பழக மாட்டார். நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால், என்னைப் பகடையாக வைத்து எம்.எல்.ஏ-வின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அவர் என்னை செருப்பை எடுத்து வர சொல்லவில்லை நான் தான் எடுத்து சென்றேன்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here