பாகிஸ்தான் கூட கிரிக்கெட் போட்டியா.. எவ்வளவு அரசியல் இருக்கு தெரியுமா.. திகில் கிளப்பும் டோணி

0
13

பாகிஸ்தான் கூட கிரிக்கெட் போட்டியா.. எவ்வளவு அரசியல் இருக்கு தெரியுமா.. திகில் கிளப்பும் டோணி

ஸ்ரீநகர்: இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பின் பல அரசியல் இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். மேலும் அது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டும் அல்ல அதற்கும் மேல், அதில் பல உணர்ச்சிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இனி இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா என்பது குறித்தும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். இவர் தற்போது ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் கிரிக்கெட் குறித்து மட்டுமே தனது கருத்துக்களை வெளியிட்டு வரும் டோணி முதல்முறையாக அரசியல் குறித்தும், இந்தியா – பாகிஸ்தான் குறித்தும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி 2012 டிசம்பரில் தொடங்கி 2013 ஜனவரி வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. டி-20 போட்டி டிராவில் முடிய, ஒருநாள் போட்டியை 2-1 என பாகிஸ்தான் வென்றது. அதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக தனியாக மோதிய தொடர். அதன்பின் இந்தியாவில் தனியாக தொடர் விளையாட பாகிஸ்தானும் வரவில்லை, இந்தியாவும் பாகிஸ்தான் செல்லவில்லை. உலகக் கோப்பை போட்டி, ஆசிய கோப்பை, டி-20 கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. பிசிசிஐ பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் இந்தநிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நிறைய போட்டிகள் நடக்கும் வண்ணம் 2014 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. பிசிசிஐக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் 2015 -2023 க்குள் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் 6 தொடர்கள் நடக்க வேண்டும் என்று முடிவானது. ஆனால் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்தியா இந்த ஒப்பந்தத்தை பின்பற்றாமல் போனது. டோணி பாகிஸ்தான் குறித்து இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா மோதும் கிரிக்கெட் போட்டிகள் குறித்து டோணி பேசி இருக்கிறார். அதில் ”பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதும் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் மிகவும் த்ரில்லாக இருக்கும். இருநாட்டு ரசிகர்களும் உணர்ச்சி வெள்ளத்தில் போட்டியை ரசிப்பார்கள். இந்த இருநாட்டிற்கும் இடையில் நடப்பது வெறும் கிரிக்கெட் மட்டுமில்லை. அது அதற்கும் மேலானது.” என்று குறிப்பிட்டுள்ளார். எல்லாமே அரசியல் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்து வருவது குறித்து டோணி பேசி இருந்தார். அதில் ”இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதை பிசிசிஐ மட்டும் முடிவு செய்ய முடியாது. இதில் நிறைய அரசியல் இருக்கிறது. நம் நாட்டு அரசியலும், அவர்கள் நாட்டு அரசியலும் சரியாகும் போது மட்டுமே பாகிஸ்தான்- இந்தியா தொடருக்கு வாய்ப்பு ஏற்படும். இதில் பல பேர் முடிவு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here