கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்!

0
269

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்!

கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங் மாநில செயலாளர் பழனிவேல் தியாகராஜனுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி வெளியான புகைப்படம் மூலம் திமுகவிற்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன…

திமுக ஐடி விங் மாநில செயலாளர் பழனிவேல் தியாகராஜன் தனது குடும்பமும் தானும் இந்து மதத்திற்கு ஆன்மீகப் பணிகள் நிறைய செய்துள்ளதாக எடுத்துக்கூறி தனக்கும் செந்தில்வாசனுக்கும் தொடர்பு இல்லாதமாதிரி அப்போது காட்டிக்கொண்டார்…

இந்நிலையில் போலீஸ் விசாரணையில் செந்தில்வாசன் திமுக ஐடி விங் உடன் பணிபுரிந்தது இன்று அம்பலமானது… இது கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது…

தற்போது மேலும் ஒரு புதிய திருப்பமாக செந்தில்வாசன் சார்பில் திமுக ராஜ்யசபா எம்பியாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் என்.ஆர்.இளங்கோவின் ஜூனியர் ராஜ் திலக் வழக்கறிஞராக ஆஜராகி இருக்கிறார் என்று ஆதாரத்துடன் அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் விவிஆர் ராஜ்சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து திமுகவினரின் தொடர்புக்கு கண்டனம் தெரிவித்து இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது…

இதன்மூலம் குறிப்பிட்ட மதப் பிரிவினரை அவமதித்து அதை பயன்படுத்தி அரசியல் செய்ய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மூலம் திமுக திட்டமிட்டதாக வெளியான தகவல் நிரூபணமாகி வருகிறது…

இதனிடையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் கறுப்பர் கூட்டம் வீடியோவிற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய போதும் ஸ்டாலின் அதைப் பொருட்படுத்தாமல் கண்டன அறிக்கை வெளியிடாமலேயே இருந்ததற்கு காரணமும் இப்போது தெளிவாகி இருக்கிறது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here