ஒரு வேளை இப்படி நடந்தால் நாங்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிடுவோம்.!! அதிரடி திட்டத்தில் திமுக.!! அம்பலமான ரகசியம்.!!

0
92

ஒரு வேளை இப்படி நடந்தால் நாங்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிடுவோம்.!! அதிரடி திட்டத்தில் திமுக.!! அம்பலமான ரகசியம்.!!

கூண்டோடு ராஜினாமா செய்வதற்கான நாள் குறித்து வைக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் தினகரன் அணி தனியாக பிரிந்துள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் எடப்பாடி அரசு தனது பெருன்பான்மையை இழந்து விட்டது என்று திமுக கூறிவருகிறது.

அதனோடு எடப்பாடி தனது பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, திமுக கூண்டோடு ராஜினாமா செய்யப்போகிறது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இதில் உண்மை என்னவென்றால், கூண்டோடு ராஜினாமா செய்வதை திமுக தரப்பு எம்.எல்.ஏ.க்கள் யாரும் விரும்பவில்லையாம்.

இதனால் கூண்டோடு ராஜினாமா முடிவை திமுக தலைமை தள்ளி வைத்துள்ளதாம்.

ஒருவேளை, 2ஜி வழக்குத் தீர்ப்புத் தங்களுக்கு எதிராக வந்தால், எடப்பாடி அரசின் நடவடிக்கையைக் கண்டித்துக் கூண்டோடு ராஜினாமா செய்து, செய்தியைத்
திசை திருப்பிவிடலாம் என்று திமுக தரப்பில் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here