வீட்டின் இருட்டறையிலிருந்து வெற்று அறிக்கை விடும் ஸ்டாலினுக்கு களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றும் முதல்வரை பற்றி பேச அருகதை கிடையாது அமைச்சர் கே.சி. வீரமணி

0
55

வீட்டின் இருட்டறையிலிருந்து வெற்று அறிக்கை விடும் ஸ்டாலினுக்கு
களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றும்
முதல்வரை பற்றி பேச அருகதை கிடையாது அமைச்சர் கே.சி.
வீரமணி

வேலூர், ஜூலை 5-
வீட்டின் இருட்டு அறையில்
அமர்ந்து கொண்டு வெற்று
அறிக்கைகளை வெளியிடும்
ஸ்டாலினுக்கு, களத்தில்
இறங்கி மக்கள் பணியாற்றும்
முதலமைச்சரை பற்றி பேச
அருகதை கிடையாது என்று
வேலூர் மே ற்கு மாவட்ட
கழக செயலாளரும், வணிக
வரி மற்றும் பத்திரப்பதிவுத்
துறை அமைச்சருமான கே.சி.
வீரமணி வாணியம்பாடி
தலைமை அலுவலகத்தில்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
சார்பில் நடைபெற்ற நிகழ்ச்
சியில் பேசினார்.

வேலூர் மேற்கு அதிமுக மாவட்ட
செயலாளரும், வணிகவரி
மற்றும் பத்திரப் பதிவுத்துறை
அமைச்சருமான கே.சி.வீர
மணி வழிகாட்டுதலின் படி,
வாணியம்பாடி தலைமை
அலுவலகத்தில் வேலூர்
மேற்கு மாவட்ட தகவல்
தொழில்நுட்ப பிரிவு சார்பில்
ஆலோசனைக்கூட்டம் நடை
பெற்றது. இக்கூட்டத்திற்கு
வேலூர் மேற்கு மாவட்ட கழக
செயலாளரும், வணிகவரி
மற்றும் பத்திரபதிவுத்துறை
அமைச்சருமான கேசி.வீர
மணி தலைமை தாங்கினார்.

வேலூர் மேற்கு மாவட்ட
கழக துணைச் செயலாளரும்,
தொழிலாளர் நலத்துறை
அமைச்சருமான டாக்டர்
நிலோபர்கபீல் முன்னிலை
வகித்தார். வேலூர் மேற்கு
மாவட்ட தகவல் தொழில்நுட்ப
பிரிவு செயலாளர் ஜனனீ
பி.சதீஷ்குமார் அனைவரை
யும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்
கள் கே.சி.வீரமணி, டாக்டர்
நிலோபர்கபீல் ஆகியோர்
கலந்துகொண்டு நிர்வாகிகள்
தேர்வு படிவங்களை கழக
நிர்வாகிகளிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்
கே.சிவீரமணி பேசியதாவது:-
திமுக என்ற கட்சி கூலி
ஏஜென்டுகளை நம்பி பொய்
பிரச்சாரங்களை மேற்கொண்டு
கட்சி நடத்துகிறது. ஆனால்
கழ–கம் என்ற பே ரியக்கம்
உணர்வுபூர்வமாக கழகத்
தொண்டர்களை வைத்துக்
கொண்டு கட்சியை சிறப்பாக
செயல்படுத்தி மக்கள் பணி
செய்து வருகிறது. எதிர்க்கட்சி
தலைவர் ஸ்டாலின் வீட்டின்
இருட்டு அறையில் உட்கார்ந்து
கொண்டு பொய்யான அறிக்
கைகளை வெளியிட்டு கபட
நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி
வருகிறார். ஆனால் முதலமைச்
சர் எடப்பாடி கே.பழனிசாமி
களத்தில் இறங்கி மக்களுக்கு
பணியாற்றி வருகிறார். ஆகவே
இருட்டு அறையில் உட்கார்ந்து
கொண்டு பொய் அறிக்–கை–களை
வெளியிட்டுக் கொண்டிருக்கும்
ஸ்டாலினுக்கு முதலமைச்சரை
பற்றி பேச எந்த அரு–க–தை–யும்
கிடையாது.

50 பேருக்கும் 100 பேருக்கும்
நிவாரண உதவிகளை வழங்கி
விட்டு 5 ஆயிரம் பேருக்கும்
10 ஆயிரம் பேருக்கும் வழங்கினோம் என்று திமுகவினர் அவர்களின் பித்தலாட்ட
ஊடகங்கள் மூலம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு
வருகின்றனர்.

நாம் களத்தில் இறங்கி 5 ஆயிரம் பேருக்கு
நலத்திட்ட உதவிகளை வழங்
கினாலும் நாம் அதை தகவல்
தொழில்நுட்பம் மூலமும் நமது
ஊடகங்கள் மூலமும் நாம்
அதிகமாக வெளிப்படுத்துவது
இல்லை. விளம்பரங்களை
விரும்புவதில்லை. அதனால்
நாம் செ ய்வது மக்களுக்கு
தெரியாமல் உள்ளது. இனிவ
ரும் காலங்களில் நாம் தகவல்
தொழில்நுட்ப பிரிவை பலப்ப
டுத்தி கழக அரசின் சிறப்பான
திட்டங்களை மக்களுக்கு
சென்றடை யும் வகை யில்
செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் நோய் தொற்
றுக்கு முன்பு ஒரு சில இடங்க
ளில் தான் பரிசோதனை
மையங்கள் இருந்தது. இன்று
92 பரி–சோ–தனை மையங்
கள் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
ஆகியோர் களத்தில் இறங்கி
அல்லும் பகலும் மக்கள்
பணியாற்றி வருகின்றனர்.
அமைச்சர்கள், மாவட்ட கழக
செயலாளர்கள், ஒன்றிய ,நகர
,பகுதி கழக செயலாளர்கள்
அனைவரும் களத்தில் இறங்கி
மக்களுக்கு தேவையான
நிவாரண உதவிகளை வாரி
வழங்கி வருகின்றனர்.

எதிரிகளின் பொய்யான
செய்திகளுக்கு தக்க பதிலடி
கொடுக்கும் வகையில் தகவல்
தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக
செயல்பட வேண்டும். தலைமை
அறிவிப்பின்படி ஒன்றிய,
நகரம், பகுதி, பேரூராட்சி கழகத்திற்கு 14 பேரும், ஊராட்சி,
வார்டு வட்டம் ஆகியவற்றிற்கு
ஒருவரை செயலாளராகவும்
கழகப் பணிகளை மிகுந்த
ஆர்வத்தோடும், துடிப்போடும்
செயல்படுத்தும் வகையில்
இளைஞர்களை தேர்வு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.
வீரமணி பேசி–னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here