ஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி

0
64

இந்த உலகத்தில் மிக உன்னதமான உணர்ச்சி எது!? என்று கேட்டால், கடும் துயரத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் தங்களைக் காப்பாற்றிய மீட்பரின் முன்னமர்ந்து, உடல் நடுங்க, குரல்கள் தடுமாறிய நிலையில் ஆனந்தக் கண்ணீரை நன்றியாக வடிப்பதுதான். இந்த காட்சியானது எந்த ஒரு கல் நெஞ்சத்தையும் புரட்டிப்போட்டுவிடும்.

இப்படியொரு நன்றிதான் சமீபத்தில் எளிய முதல்வர் எடப்பாடியாரின் கரங்களை நனைத்திருக்கிறது. அது சில லட்சம் விவசாயிகளின் ஆனந்தக் கண்ணீர் என்றால் அதில் எவ்வளவு அழுத்தமான உண்மையும், உன்னதமும் இருக்குமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சம்பவம் நடந்தது ஈரோடு மாவட்டத்தில். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகள் தொடர்பான கூட்டத்தை முடித்துவிட்டு அப்படியே ஈரோடு மாவட்டம் சென்றார் முதல்வர். கொங்கு மக்களின் நெடுங்கால கனவாகிய ‘அத்திக்கடவு – அவினாசி’ திட்டப்பணிகளை தீவிரமாக முடுக்கிவிடும் நிகழ்வில் கலந்து கொண்டு, சில ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

அரசாங்கம் எடுக்கும் சில முயற்சிகளை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்கது’ என பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்தத் திட்டமோ உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புடையது. ஏனெறால், இந்தியாவின் பல வகையான உணவுப்பொருள் தேவையை தீர்ப்பது கொங்கு மண்டல விவசாயிகள்தான். அவர்களின் நிலங்கள் செழிப்பாய் இருந்தால்தான் மகசூலும் செழிக்கும், இந்தியாவின் வயிறும் நிரம்பும். அதனால்தான் ‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.’ என்பார்கள்.

இயற்கையால் உயர்வாய் ஆசீர்வதிக்கப்பட்ட கொங்கிலும் பல பகுதி விவசாயிகளுக்கும் பாசன நீர் பிரச்னை உண்மையில் இருந்தது. அதற்கு தீர்வாகத்தான் ’அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றுங்கள்’ என பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர். அவர்களின் வலியை அனுபவப்பூர்வமாக உணர்ந்த முதல்வர், சமீபத்தில் அதை தீவிரமாக போக்கும் முயற்சியில்தான் இந்த திட்டப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

அதன் ஒரு முகமாகதான் இந்த விழா. இந்த விழாவின் மேடையில் முதல்வர் இருக்கையில், ’விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்று ஒரு விவசாயி கேட்க, ’கொரோனா பரவல் அச்சம்’ உள்ளிட்டவற்றையெல்லாம் யோசிக்காமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் அந்த விவசாயியை பேசிட அனுமதித்தார் முதல்வர்.

எடப்பாடியார் முன்னிலையில் அந்த விவசாயி பேசியவற்றில் ஹைலைட் விஷயங்கள் இதோ……

* அறுபது ஆண்டு கால கோரிக்கையை எடப்பாடி அய்யா அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்கள்.

* அவருக்கு இதயத்திலிருந்து நன்றி சொன்னால் போதாது, எங்களின் கண்களில் இருந்து வடிகின்ற கண்ணீரைக் காணிக்கையாக்குகிறோம்.

* எத்தனையோ அரசுகள் வந்து வந்து போயின, எத்தனையோ போராட்ட ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடத்தினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

* தான் ஒரு விவசாயி என்பதால் அந்த வலியைப் புரிந்து கொண்டு நிறைவேற்றியிருக்கிறார், இந்த மண்ணின் மைந்தரான முதல்வர் எடப்பாடியார்.

* இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகையிலேயே சொன்னார்…டிசம்பருக்குள் குளம் குட்டைகளில் நீரை நிறுத்திக் காட்டுவேன்! என்று. சொன்னபடியே செய்து கொண்டிருக்கிறார்.

* இந்தப் பணி எப்படி செல்கிறது என்பதை ஒவ்வொரு மாதமும், அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்கிறார் முதல்வர்.

* காய்ந்த பயிருக்கு உயிர் நீராக தண்ணீரை தந்தவர் கடவுளுக்குச் சமம், அந்த வகையில் கண்கண்ட கடவுளாக நம் முதல்வரை பார்க்கிறோம். கொங்கு எந்த காலத்திலும் உங்களை மறவாது, நன்றியை தர தயங்காது….
என்று தழுதழுத்த குரலில், லட்சோப லட்சம் விவசாயிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here