மும்பைக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0
3

மும்பைக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பல்வேறு இடங்களில் அதிகளவு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழையும், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே போல், புனே, நாசிக், துலே, ஜல்காவ், நந்துர்பர், சத்தாரா, கோலாப்பூர், பர்பானி, நாந்தெட், ஹிங்கோலி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Mumbai,Thane, Raigad, Palghar, Mumbairainfall,IMD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here