கால்பந்து : இந்திய அணி சாம்பியன்

0
14

கால்பந்து : இந்திய அணி சாம்பியன்

மும்பை:

இந்தியா, மொரிசியஸ், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா, மொரிசியஸ், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு கால்பந்து தொடர் மும்பையில், 19-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா – மொரீசியஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் – மொரிசியஸ் அணிகள் மோதின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சனனில் முடிந்தது.

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, நேற்று (24-ம் தேதி) நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியை எதிர்கொண்டது.

போட்டி தொடங்கிய 37-வது நிமிடத்தில் இந்திய அணியின், ஜாக்கிசந்த் சிங் முதல் கோல் அடித்தார். இதன்மூலம், இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 72-வது நிமிடத்தில் செயிண்ட் கிட்ஸின் அமோரி குவானே கோல் அடித்தார். இதன்மூலம் ஆட்டம் சமனானது.

அதன்பின்னர், இரு அணிகளின் கோல் அடிக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதிவரை வேறு எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

புள்ளிப்பட்டியலில், ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் எடுத்த இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. செயிண்ட் கிட்ஸ் அணி இரண்டு டிராவுடன் 2 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்தது. மொரீசியஸ் அணி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here