உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி.. இந்திய வீராங்கனைக்கு தங்கம்

0
24

உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி.. இந்திய வீராங்கனைக்கு தங்கம்

கலிபோர்னியா: உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் பதக்கம் வென்று இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த இந்த போட்டியில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு தங்கம் வென்றார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு 48 கிலோ எடை பிரிவு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இறுதி போட்டியின் முதல் சுற்றில் 85 கிலோ எடையை தூக்கினார். அதற்கு அடுத்த சுற்றில் 109 கிலோ எடையை தூக்கினார். இதன் மூலம் இரண்டு சுற்றுகளையும் சேர்த்து 194 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார். மேலும் அவர் அதிக புள்ளிகள் பெற்று இறுதி போட்டியில் வெற்றபெற்றார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே இவர் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here