முகப்புநடிகர் கமல்ஹாசனை சீண்டும் தமிழிசை சௌந்தர்ராஜன்

0
34

முகப்புநடிகர் கமல்ஹாசனை சீண்டும் தமிழிசை சௌந்தர்ராஜன்

நடிகர் கமல்ஹாசனை சீண்டும் தமிழிசை சௌந்தர்ராஜன்
கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து பதிவிடுவதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கிண்டலாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் பற்றி தனது கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் பல எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்து

” காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” என்று பதிவிட்டிருந்தார்.

இது சமூக வளைதளம் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளிடையே பரப்பரபாக பேசப்பட்டது. இதைத்டொடர்ந்து இன்று கமல்ஹாசனின் பதிவிற்கு எதிராக தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவில் “ காந்தி குல்லாவையும் காவி குல்லாவையும் முந்திக் கொண்டு அவசரமாக போட்டவர்கள் முத்தலாக் தீர்ப்பு பற்றி விஸ்வரூப அமைதி?????ஒரு தலை குல்லாவா? ” என நடிகர் கமலை கிண்டலடிப்பது போல் பதிவிட்டிருக்கிறார்.

முஸ்லிம்களின் முத்தலாக் விவாகரத்துக்கு ஆறு மாத கால தடை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு கமல்ஹாசன் மௌனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here