அஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு

0
1246

அஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு


கரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சிறப்பான தலைமையுரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்

மேலும் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா அவர்கள் முன்னிலை வகித்து விளக்கவுரையாற்றினார்.,

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் திரு.VVR.ராஜ்சத்யன் அவர்கள் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவின் முக்கியத்துவம் குறித்தும் அதில் செயல்படுவது குறித்தும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்களின் நலன் உள்ளிட்டவைகளை பற்றி சிறப்புரையாற்றினார்.

பின்னர் பொறுப்பாளர்கள் தேர்வுக்கான நேர்கானல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக உறுப்பினர்களிடையே நேர்கானல் நடத்தினார்.

மேலும் இணைய தளங்களில் செயல்பாடுகள் பற்றியும் அதில் செயல்படுவது பற்றியும் சிறப்பான செய்முறை விளக்கங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அபி செல்வம்  அவர்களும்  நகர  ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here