4 அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் – தினகரன் அதிரடி

0
22

4 அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் – தினகரன் அதிரடி

சென்னை,

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் பொறுப்பில் இருக்கும் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாதவரம் வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் பி.தங்கமணி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் எஸ்.அன்பழகன் (அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
அ.தி.மு.க. (அம்மா) ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வும், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அ.தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் பொறுப்பில் இருக்கும் எஸ்.வளர்மதி, மைதிலி திருநாவுக்கரசு, சைதை சா.துரைசாமி, பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம், புத்திசந்திரன், மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. (அம்மா) கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பின் நிர்வாகிகள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக டாக்டர் வி.எஸ்.விஜய் (முன்னாள் அமைச்சர்), சி.கோபால் (முன்னாள் எம்.பி.), தேனாடு டி.லட்சுமணன் (நீலகிரி மாவட்ட அவைத் தலைவர்), இலக்கிய அணி செயலாளராக கா.டேவிட் அண்ணாதுரை (ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் எஸ்.கலைச்செல்வன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் வாரிய தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ஏ.முனியசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் வ.து.ந.ஆனந்த் (ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரனும், பொருளாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.சேகரும், காஞ்சீபுரம் நகரக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.பி.ஸ்டாலினும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தின், மாவட்ட, ஒன்றிய, நகரக் கழகம், எம்.ஜி.ஆர். மன்றம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளராக எஸ்.எம்.எஸ்.செல்வம், ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியக் கழக ஒன்றிய செயலாளராக கே.ரஜினி குமாரவடிவேல், குன்றத்தூர் ஒன்றியக் கழக செயலாளராக மலைப்பட்டு பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளராக எஸ்.எம்.ஸ்ரீநாத், ஒன்றியப் பொருளாளராக எருமையூர் இ.அசோகன், காஞ்சீபுரம் நகர செயலாளராக காஞ்சி கே.பரிமளம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here