எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் மோடி பயணம் – லடாக் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு

0
14

இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி திடீரென லடாக் சென்றுள்ளார்.

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் திருப்பமாக பிரதமர் மோடி இன்று காலை லடாக் சென்றுள்ளார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார். சுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முப்படையினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Narendra Modi travels to the border – Welcome to Modi’s visit to Ladakh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here