விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா அமேஸ் கார்!

0
20

விரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா அமேஸ் கார்!

மாருதி டிசையர் காருக்கு அடுத்து வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் காம்பேக்ட் ரக செடான் கார் ஹோண்டா அமேஸ். இடவசதி, அதிக மைலேஜ், ஹோண்டா பிராண்டின் மீதான ஈர்ப்பு போன்றவை இந்த காருக்கு சிறந்த வரவேற்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஹோண்டா அமேஸ் காருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ளும் வகையில், புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் விரைவில் களமிறக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச வாகன கண்காட்சியில், புதிய ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் மிகவும் சொகுசாகவும், பிரிமியம் அம்சங்கள் நிறைந்ததாகவும் வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி காரின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய அமேஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சேஸியில்தான் புதிய மாடலும் கட்டமைக்கப்படும். வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், உட்புறத்தில் மிகவும் பிரிமியமாக இருக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.அதன்படி, டேஷ்போர்டு டிசைன் மிக நவீனமாக இருப்பதுடன், உயர்தர பாகங்களுடன் இன்டீரியர் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் பயன்படுத்தப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாருதி டிசையர் கார் மட்டுமின்றி, ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா டீகோர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here