இறங்கி வந்தார் ஓபிஎஸ்: ராட்சத கிணறு கிராம மக்களிடம் ஒப்படைப்பு!

0
16

இறங்கி வந்தார் ஓபிஎஸ்: ராட்சத கிணறு கிராம மக்களிடம் ஒப்படைப்பு!


தேனி:

மக்களின் போராட்டம் காரணமாக, ஓ.பி.எஸூக்கு சொந்தமான கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம், இங்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் நிலம் உள்ளது. இங்கு 200 அடி ராட்சத கிணறில் மோட்டார் மூலம் பெருமளவு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இவர்களது குற்றச்சாட்டை ஓ.பி.எஸ். கண்டுகொள்ளாததால், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த கிணறு உள்ள பகுதியை உரிய விலை கொடுத்து ஊர் சார்பில் வாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து ஓ.பி.எஸ். எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், கிணறை மக்களுக்கு ஓ.பி.எஸ். இலவசமாக அளிக்கப்போவதாக அவரது தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திடீரென புஷ்பராஜ் என்பவருக்கு அந்த கிணறு உள்ள நிலப்பகுதி கைமாற்றப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

முன்பைவீட வீரியமாக போராட்டம் தொடரும் என்று அறிவித்த மக்கள், அதன்படி போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.

இதனால் வேறு வழயின்றி ஓ.பி.எஸ். இறங்க வந்தார். தற்போது அந்த நிலத்துக்கு உடைமையாளராக இருக்கும் புஷ்பராஜ், கிணறு உள்ள பகுதியை ஊர் மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்

மேலும் ஒப்படைக்கப்பட்ட அந்த ராட்சத கிணற்றுக்கு அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என்று இருதரப்பு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் கிணறு பிரச்சனை தீர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here