கிணறு வெட்டியதற்கு மக்கள் போராட்டம்: ‘குறுக்கு வழியில் என்னை எதிர்க்கும் அரசியல் சூழ்ச்சி’

0
71

கிணறு வெட்டியதற்கு மக்கள் போராட்டம்: ‘குறுக்கு வழியில் என்னை எதிர்க்கும் அரசியல் சூழ்ச்சி


 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் கிணறு வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் 243 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘தினத்தந்தி’ நிருபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:–

இந்த தோட்டம் எனக்கு சொந்தமானது தான். இங்கு கிணறுகள் வெட்டியதில் எந்த விதிமுறை மீறலும் நடைபெற வில்லை. இதை அதிகாரிகளிடம் கேட்டாலே சொல்வார்கள். மக்களுக்காக மக்களில் ஒருவனாக இருந்து பணியாற்றி வருகிறேன். இந்த சம்பவம் என்பது என்னை எதிர்க்க நினைக்கும் சிலரின் தூண்டுதலால் நடக்கிறது. குறுக்கு வழியில் என்னை எதிர்க்கும் அரசியல் சூழ்ச்சி இது. மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும். நான் தர்மத்தின் வழியில் நடக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here