ஜெ. நினைவு இல்லம்: சுயநலம் கருதி அவசர கதியில் அறிவிப்பு! டிடிவி தினகரன்

0
54

ஜெ. நினைவு இல்லம்: சுயநலம் கருதி அவசர கதியில் அறிவிப்பு! டிடிவி தினகரன்

சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு சிறையில் அவரை டிடிவி தினகரன் சந்தித்து ஆசி பெற்று ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவின் இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு, விசாரணை கமிஷன் ஆகியவை ஆள்பவர்களின் சுயநலம் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிற்கு இன்று 63வது பிறந்தநாள் இதனையடுத்து சிறைக்கு சென்று டிடிவி தினகரன் அவரை சந்தித்து பேசியுள்ளார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா தனக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாக கூறினார்.

மேலும், அம்மாவின் இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற தொண்டர்க ளின் கோரிக்கையை, அவசர கதியில் அரசு அறிவித்து உள்ளது. ஜெயலலிதா இல்லம் நினைவு இல்லமாக அறிவித்ததில் தவறில்லை.

ஆனால், அம்மா ஏதேனும் உயில் எழுதி வைத்திருக்கிறார்களா என்பதை ஆராயாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உயிர் குறித்து ஆராய்ந்து, சரியான முறையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் ஆனால், ஆட்சியாளர்கள் சுயநலம் கருதி அவசர கதியில் அறிவித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து இரு அணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி, பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் இணைப்பு நடைபெற்றால் அதற்கான ஆயுட்காலம் நீடிக்காது என்றும், தொண்டர்களின் விருப்பத்ததிற்கு மாறாக எதுநடந்தாலும் அது நீடிக்காது என்றும் கூறினார்.

மேலும், விசாரணை கமிஷன் விசாரணையின் பொதுச்செயலாளர் சசிகலா பத்தரை மாற்று தங்கமாக வருவார் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here