பொன்னமராவதியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

0
35

பொன்னமராவதியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவுப்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின்
மேற்பார்வையில் முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரமையத்தில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது.

தற்போது, பொன்னமராவதியில் நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்ட அனைவரையும்
வட்டார வள மைய மேற்பார்வையாளர் இரா.செல்வக்குமார் வரவேற்றார்.வ

இம்மதிப்பீட்டு முகாமை அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இராமதிலகம், கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் லதாதேவி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து மாவட்;ட
ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் சிறப்புரையாற்றினார்.

இம்முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் கொண்ட
மாணவர்கள் அனைவரையும் கண் மருத்துவர் தையல்நாயகி, காது,மூக்கு,தொண்டை மருத்துவ நிபுணர் அருணகிரி, குழந்தைகள்
நல மருத்துவர்கள் இந்து, இராமலிங்கம், எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் ஆகியோர்கள்
கொண்ட குழுவினர் பரிசோதனை செய்து அடையாள அட்டை, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட
உதவிகளுக்கான பரிந்துரைகள் செய்யப்பட்டது.

இம்மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 6 முதல் 14 வயது வரை உள்ள 150
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மதிய உணவு, தண்ணீர் பாக்கெட் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும்பயணப்போக்குவரத்துப்படி தொகை வழங்கப்பட்டது.

உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அலிம்கோ நிறுவனம் சார்பில் வழங்கப்பட
உள்ளது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, சக்திவேல்பாண்டி, மதனகுமார்,
ரஹிமாபானு, புவனேஸ்வரி, உடலியக்க நிபுணர்கள்; தங்கவேல், செந்தில்குமார், சரவணன், செந்தில்செல்வன்,
கோவிந்தராஜ், புதுக்கோட்டை, திருமயம், கறம்பக்குடி வட்டார வள மைய சிறப்பாசிரியர்கள் மற்றும்பொன்னமராவதி வட்டார வள மைய சிறப்பாசிரியர்கள் கலைச்செல்வி, தனலெட்சுமி, ராஜேஷ்கண்ணா, பிரான்சி
சோபியா, பள்ளி ஆயத்த பயிற்சி மைய பாதுகாவலர் பொன்னம்மாள், உதவியாளர் அம்சவள்ளி ஆகியோர்கள்
கலந்து கொண்டனர்.

படங்கள் மற்றும் செய்திகள்
செய்தியாளர் கீரவாணி அழ.இளையராஜா. எம்.ஏ…எம்.பில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here