திருமயம் குறுவட்ட அளவிலான டகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்ததுள்ளனர்.

0
26

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்
திருமயம் குறுவட்ட அளவிலான
டகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில்
சாதனை படைத்ததுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் குறுவட்ட அளவிலான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டிகளில் பல பிரிவுகளில்

பொன்னமராவதி
அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை
புரிந்துள்ளனர்.

குறுவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி
14 வயதுக்குட்பட்டோர் பிரிவு :

14 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஹேன்ட் பால் போட்டி, ஹாக்கி
போட்டி, தனிநபர் கேரம் போட்டி, இருநபர் கேரம் போட்டி ஆகியவற்றில்
முதலிடமும், த்ரோ பால் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில் இருநபர் கேரம ; போட்டியில் முதலிடமும், இருநபர் ஷட்டில் பாட்மிட்டன்
போட்டியில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.

17 வயதுக்குட்பட்டோர் பிரிவு :

17 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஷட்டில் பாட்மிட்டன் போட்டி, ஹாக்கி
போட்டிகளில் முதலிடமும், பீச் வாலி பால் போட்டியில் இரண்டாமிடமும்
பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில் தனிநபர் மற்றும் இருநபர் கேரம் போட்டிகளில்
முதலிடமும் தனிநபர் மற்றும் இருநபர் ஷட்டில் பாட்மிட்டன் போட்டிகளில்
இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.

19 வயதுக்குட்பட்டோர் பிரிவு :

19 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஹாக்கி போட்டி முதலிடமும்,
ஹேன்ட் பால் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில்
இருநபர் ஷட்டில் பாட்மிட்டன் முதலிடமும் தனிநபர் ஷட்டில் பாட்மிட்டன்
போட்டியில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.

குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி
குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகளிலும் அமல அன்னை மெட்ரிக் பள்ளி
மாணவர்கள் கீழ்க்கண்ட போட்டிகளில் தங்கள் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
முதலிடம் பெற்றோர் :
14 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் கீதா 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும்
வட்டு எறிதல் ஆகிய போட்டிகளிலும், 17 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில்
ஏ.ஆர்.ராம்குமார் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் மும்மடி தாண்டுதல் ஆகியபோட்டிகளிலும், ஹரிகரன் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியிலும், 17
வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் எஃப்.ஜெப்ரின் ஜெரிஷா மும்மடி தாண்டுதல்
போட்டியிலும், 19 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் பாரதிசிவா வட்டு எறிதல்
போட்டியிலும், 19 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் கௌசல்யா வட்டு எறிதல்
போட்டியிலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
இரண்டாமிடம் பெற்றோர் :
19 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் பாரதிசிவா மும்மடி தாண்டுதல்
போட்டியிலும், 19 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் எப்சிபா 100 மீட்டர் தடை
தாண்டுதல் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் மும்மடி தாண்டுதல்
ஆகியபோட்டிகளிலும், ஸ்ரீபிருந்தா நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர்
ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளிலும் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.
மூன்றாமிடம் பெற்றோர் :
17 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் அப்துல்ரஹீம் மும்மடி தாண்டுதல்
போட்டியிலும், 19 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் பாரதிசிவா 200 மீட்டர்
ஓட்டப்பந்தயத்திலும், 19 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் அபிநயா 5000
மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் கௌசல்யா வட்டு எறிதல் போட்டியிலும், ஸ்ரீபிருந்தா
மும்மடி தாண்டுதல் போட்டியிலும் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
பாராட்டு விழா :
திருமயம் குறுவட்ட அளவில் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வர் அருட்சகோதரி.ச.ம.மரிய புஷ்பம் தலைமை வகித்தார். தன்
தலைமையுரையில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும்
பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்ட அவர் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற
கீதா, இராம்குமார், ஹரிகரன், அப்துல்ரஹீம், எப்சிபா, ஜெரிஷா, பாரதிசிவா,
கௌசல்யா, ஸ்ரீபிருந்தா, அபிநயா உள்ளிட்ட மாணவ மாணவிருக்கு
சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பெரு முயற்சி எடுத்து, மாணவ மாணவியரைப் பயிற்றுவித்த
உடற்கல்வி ஆசிரியர் திரு.கதிரேசன் அவர்களுக்கும், இராங்கியம், புதுக்கோட்டை
ஆகிய போட்டிகள் நடைபெற்ற இடங்களுக்கு மாணவர்களை உடற்கல்வி
ஆசிரியருடன் இணைந்து அழைத்துச் செனற ஆசிரியர்கள் சலோ, பிரகாஷ்,
முத்துவேல், ஆரோக்கிய தாஸ், பிரியாதேவி மற்றும் ரேச்சல் ஆகியோருக்கும் தம்
நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து ஆசிரியர் இரா.பிரின்ஸ் தொடர்ந்து மாவட்ட அளவில் இந்த
சாதனையைத் தக்க வைத்து மாநில அளவில் வெற்றி பெற வேண்டுமென்கிற தம் விருப்பத்தைப் பதிவு செய்து வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் செயலர்கள் தாஸ், பிரியாதேவி, மெர்சி ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here