சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிதகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம்

0
9

  1. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிதகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நகர பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம் சம்பந்தமாக இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் திரு PR.செந்தில்நாதன் அவர்கள் தலைமையேற்று மேலான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கழக செய்தி தொடர்பாளர் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் அவர்கள் 2021 தேர்தலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து மேலான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் KM.கோபி அவர்கள் சமூக வலைதளங்களில் கழகத்திற்காக சிறப்பாக இயங்க கூடிய துடிப்பான இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பது குறித்து தெளிவாக விளக்கினார்கள்.

திருப்பத்தூர் பேரூர் கழகச் செயலாளர் திரு இப்ராஹிம்ஷா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட அவைத்தலைவர் திரு AV.நாகராஜன் அவர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருப்பத்தூர் திரு இராமலிங்கம் அவர்கள், சிங்கம்புணரி திரு சொ.வாசு அவர்கள் எஸ்.புதூர் திரு ராஜமாணிக்கம் அவர்கள் நெற்குப்பை பேரூராட்சி செயலாளர் திரு அடைக்கப்பன் அவர்கள் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு பிரபு அவர்கள், மாவட்ட கவுன்சிலர் திரு பொன்மணி.பாஸ்கர் அவர்கள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here