காமன்வெல்த் : தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம்

0
33

காமன்வெல்த் : தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம்

கான்பெர்ரா:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் அடுத்தாண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடந்த சீனியர் பிரிவு போட்டிகளில் 77 கிலோ பிரிவில் இந்தியாவின் சதீஸ் சிவலிங்கம் தங்கம் வென்றுள்ளார்.

சதீஸ் சிவலிங்கம் முறையே 148 கிலோ மற்றும் 172 கிலோ என மொத்தம் 320 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் வெங்கட் ராகுல் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் இருவரும் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here