மதுரையில் `ஏகன் ஆதன் கோட்டம்’-தமிழி கல்தூண்!

0
6

மதுரையில் `ஏகன் ஆதன் கோட்டம்’-தமிழி கல்தூண்!

மதுரை செக்கானூரணி ஏகநாதசுவாமி மடத்தில் உள்ள கல்தூண் ஒன்றை ஆராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், அதில் மிகவும் பழைமையான 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்தூணைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில்,

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழி கல்தூண் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில்,`ஏகன் ஆதன் கோட்டம்’ எனத் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது’ மேலும் கோட்டம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் அன்றி, முதன்முதலாக தமிழ் பிராமி என்று அழைக்கப்படுகின்ற தமிழி எழுத்தாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தொல்லியல் அறிஞர் வெ வேதாசலம், ஆய்வாளர்கள் காந்திராஜன், இராசவேல் , ஆனந்தன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இந்த கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

TAG: ஏகன் ஆதன் கோட்டம், Tamil script,Madurai,Tamil-Brahmi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here