ஆளுநரின் உரை வெறும் சம்பிரதாயம்தான்: டிடிவி தினகரன் அதிரடி

0
100

ஆளுநரின் உரை வெறும் சம்பிரதாயம்தான்: டிடிவி தினகரன் அதிரடி

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை வெறும் சம்பிரதாய உரையாகத்தான் இருந்தது என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், திருவாரூரை தவிர பொங்கல் பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும் தமிழக அரசுக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை வெறும் சம்பிரதாய உரையாகத்தான் இருந்தது. ஆளுநரின் அறிவிப்பு வானத்திற்கும், பூமிக்கும் இடையே இருக்கும் இடைவெளியாக இருக்கிறது. கஜா புயலுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here