வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்தார்

0
39

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

* மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

* மதுரை ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனை, தோப்பூர் காசநோய் மருத்துவமனை என சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில்.

* தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி இணைந்து வடபழஞ்சி பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 900 படுக்கை வசதிகளுடன் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

* வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஆயிரம் படுக்கை வசதிகளுக்கு தேவையான கட்டில் மெத்தைகள், மின் விசிறிகளுடன் கொண்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த தொழில்நுட்ப பூங்காவில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடங்களில் உள்ள அறைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் படுக்கைகள் அமைத்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

* ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தேவையான 50க்கும் மேற்பட்ட கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதற்காக ஜென்சட் வசதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் தற்போது திறந்து வைத்து ஆய்வு செய்து வருகிறார், அவருடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன்செல்லப்பா MLA தகவல்தொழில் நுட்ப மதுரை மண்டல செயலாளர் விவிஆர்.ராஜ்சத்யன் தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here