அன்பியல் இயக்கமான அதிமுகவை, திமுகவால் பாழ்படுத்திவிட முடியாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0
25

அன்பியல் இயக்கமான அதிமுகவை, திமுகவால் பாழ்படுத்திவிட முடியாது என்று, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சாத்தான்குளம் மரணத்தில் தொடக்கத்தில் இருந்தே அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மக்களும், நீதிமன்றமும் பாராட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் முரண்பாடாக பேசினார் என்றும், நீதி மறுக்கப்பட்டது எனவும் மு.க.ஸ்டாலின் கூறியதை தெளிவுப்படுத்த வேண்டும் என கேட்டுள்ள அமைச்சர், மரணத்தை முன்வைத்து தந்திர அரசியலை மேற்கொண்டால் மயானத்திற்கு அனுப்பப்படுவது நிச்சயம் என கூறியுள்ளார்.

புரளி விதைப்பதும், புலனாய்வு புலிகள் போல திமுகவினர் நினைத்துக்கொள்வதும் ஆக்கம் அற்ற செயல் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், தர்மத்தின் பாதையில் செங்கோல் செலுத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சியை, நரிசூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here