பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த அரக்கத் தாய்!

0
49

பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த அரக்கத் தாய்!

ஐதராபாத்தில் பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்து சித்ரவதை செய்த அரக்கத் தாய் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 25). லலிதாவுக்கு திருமணமாகி 4 வயதில் மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருடைய இரண்டாவது கணவர் பிரகாஷ். லலிதாவும், பிரகாசும் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் அந்த சிறுமியை வெறுத்து ஒதுக்கினர். லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, சிறுமி செய்த சிறிய தவறுக்காக கோபமடைந்த லலிதா கொடூரத்தின் உச்சமாய் பெற்ற மகளையே சூடான தோசைக்கல்லில் தூக்கி உட்கார வைத்தார். இதனால் சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பிறகு குழந்தைகள் ஆதரவு மையத்துக்கு குழந்தையுடன் சென்ற லலிதா, இந்த குழந்தை சாலை ஓரத்தில் கிடந்ததாக கூறினார். லட்சுமி மீது சந்தேகப்பட்ட ஆதரவு மைய ஊழியர்கள் சிறுமியை பரிசோதித்தனர், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தெலுங்கானா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின்பேரில் லலிதா, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here