கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதிலும், 5ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

0
12

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதிலும், 5ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை,
ஜூலை.4&
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (03.07.2020) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிவுரையின்படியும், உத்தரவின்படியும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனால் தான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது.
முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 10 இலட்சம் குடும்பங்களுக்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு  கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதுபோலவே, கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதிலும், சுகாதாரத்துறையின் மூலம் 5ஆயிரம் சிறப்பு  மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களில் சளி, காய்ச்சல், போன்ற தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில்,  கொரோனா வைரஸ் தடுப்புகள் அனைத்து துறை அலுவலர்களும் முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள்.
கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்கை அளித்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டினை வெளிப்படுத்தி வருகிறது.

தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில், 149 மருத்துவர்கள், 146 செவிலியர்கள், 268 பணியாளர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில், அதிக தொற்று ஏற்பாடாத பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மே 25 முதல் விமானங்கள்  இயக்கப்பட்டு  வருகின்றன.

இதன்மூலம் இதுவரை 19,161 பயணிகள் விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர். இதில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை மேற்கொண்டதில் 111 நபருக்கு தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 46 நபர்கள் கோவை மாவட்டத்தையும், 65 நபர்கள் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 60,282 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டதில், 608 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 318 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 287 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து  வருகை புரிந்த, 8302 நபர்கள் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று சிகிச்சைக்கென பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  400,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 405, வட்ட அளவிலான மருத்துவமனைகளில்;  471, ஆரம்ப சுகாதார நிலையங்களில்  240,  தனியார் மருத்துவமனைகளில்  1,456,  மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளில்  713, மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் என கண்டறியப்படுபவர்களுக்கு கொடிசியா உள்ளிட்ட 6 பகுதிகளில் 1000 படுக்கை வசதிகள்  என மொத்தம் 4685 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜிசரவணன், மாநரகாட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கி.ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மரு.காளிதாசு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்;) மரு.கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here