தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை – ராஜ்நாத் சிங்

0
13

தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி:

தமிழகத்தில் இரு அணிகளாக இருந்த அதிமுக இணைந்ததும், டி.டி.வி தினகரன் எதிர்ப்பு நிலையை எடுத்தது. இதனால், 21 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து வந்து தினகரனை ஆதரித்தனர். மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர்.

சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் அதிமுக.வில் இன்னும் தொடர்வதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் தெரிவித்ததாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேபோல், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசுவதற்காக சில அமைச்சர்கள் இன்று டெல்லி சென்றிருந்தனர். இந்நிலையில், “தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. அதிமுகவில் நடப்பது உட்கட்சிப்பூசல். இதனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here