வீக்… அதிமுக செம வீக்… என்று உளவுத்துறை கொடுத்த ஷாக்.

0
467

வீக்… அதிமுக செம வீக்… என்று உளவுத்துறை கொடுத்த ஷாக்.

சென்னை: வீக்… அதிமுக செம வீக்… என்று உளவுத்துறை கொடுத்த அறிக்கையால் ஷாக் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் 3ம் தேதி துவங்கியது. வரும் 10 தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இத்தேர்தலில் திமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்ற பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் தேர்தல் எப்படி இருக்கும் என்பது குறித்து உளவுத்துறை நடத்திய ஆய்வு செய்த கொடுத்த அறிக்கை அதிமுகவிற்கு செம ஷாக் ஆகி உள்ளது.

இந்த தேர்தலில் அமுமுக முதலிடமும், திமுக 2வது இடத்திலும் அதிமுக 3வது இடத்திலும் இருப்பதும் சர்வே மூலம் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக கஜா புயல் நிவாரண உதவிகள் விவகாரத்தில் பொதுமக்கள் அதிமுக-பாஜ கூட்டணி மீது கடுமையான அதிருப்தியில் உள்ளதாகவும் உளவுத்துறையின் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக தேர்தலை நிறுத்த அதிமுக கடும் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Check out A Prabhu (@APrabhuOfficial): https://twitter.com/APrabhuOfficial?s=09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here