டிடிவி தினகரனுக்கு தஞ்சை எம்.எல்.ஏ ரங்கசாமி ஆதரவு

0
28

டிடிவி தினகரனுக்கு தஞ்சை எம்.எல்.ஏ ரங்கசாமி ஆதரவு


அதிமுக அம்மா அணியின் துனை பொதுசெயலாளர் டிடிவி தினகரனுடன் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ ரங்கசாமி சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். இச்சந்திப்பின் மூலம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.

அதிமுக அம்மா அணியின் பொதுசெயலாளர் வி.கே சசிகலா சிறையில் உள்ள நிலையில், டிடிவி தினகரனை துனை பொதுசெயலாளராக அறிவித்து விட்டு சென்றார். ஆர்.கே நகர் தேர்தல் வரை அதிமுக அம்மா அணியை வெளிப்படையாக வழிநடத்தி வந்த டிடிவி தினகரனை திடீரென அமைச்சர்கள் ஒதுக்குவதாக தெரிவிக்க, சில எம்.எல்.ஏக்கள் அதற்கு போர்கொடி தூக்கினர். அதன் பிறகு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்பட தொடங்கினர்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன், கருணாஸ் உட்பட பலரும், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த காட்சியெல்லாம் அரங்கேறியது. இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கைது செய்யப்பட்ட தினகரன், திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக அவரை சந்தித்து வந்தனர். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தனி அணியை தினகரன் துவக்குவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் தான் தற்போது டிடிவி தினகரனை தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ ரங்கசாமி சந்தித்துள்ளார்.

டிடிவி தினகரனுடன் மேலும் ஒரு எம்.எல்.ஏ சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here