புதுச்சேரி வேண்டாம், பெங்களூரு போலாம்.. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்…

0
41

புதுச்சேரி வேண்டாம், பெங்களூரு போலாம்.. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்…

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்படாமல் அதற்கு பதிலாக அவர்கள் பெங்களூரில் தங்க வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பிற்கு பின்னர் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் கட்சியையும், சின்னத்தையும் முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்தற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த எங்களின் நன்றியினை மறந்து செயல்படும் முதல்வருக்கு நாங்கள் அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநருக்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடிதம் அளித்தனர்.

இதனால் முதல்வர் எடப்பாடி.பழனிசாமியின் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடத்த வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மிரட்டப்படலாம் அல்லது அவர்கள் மற்ற அணிக்கு இழுக்கப்படலாம் என்பதால் அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதி போன்று புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களை தற்போது பெங்களூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டால் எடுக்கப்படும் முடிவுகளை சசிகலாவுடன் எளிதில் கலந்து ஆலோசிக்க முடியும் என்பதால் அவர்கள் அங்கு தங்க வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here