ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்… அசத்தும் அமமுகவினர். #AMMKFlagFliesHigh

0
1361

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்… அசத்தும் அமமுகவினர். #AMMKFlagFliesHigh

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக பிரிந்து இருந்த நிலையில் தான்தான் உண்மையான அதிமுக என ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற மாபெரும் வரலாற்று வெற்றி மூலம் தொண்டர்களுக்கு காட்டினார் டிடிவி.தினகரன்

அதற்குபின் அவர் அம்மாவின் திருவுருவம் பதித்த கொடியோடு அமமுக என்ற கட்சியை தொடங்கி இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் கட்சியாக ஓராண்டிலேயே கட்டமைத்து சாதித்தார்.

இன்று ஒரு முக்கிய நிகழ்வாக ஜெயலலிதாவின் திருஉருவம் தாங்கிய கழக கொடியை ஏற்ற இருக்கிறார். அதாவது ஆசியாவிலேயே மிக உயரமான கொடியை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் என்ற ஊரில் ஏற்றிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் #AMMKFlagFliesHigh என்ற ஹாஷ்டாக்-ஐ இன்று காலை முதலே ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here