சின்னம் முக்கியமல்ல…செயல்தான் முக்கியம்! விவசாயிகள் சங்க நிர்வாகி பேச்சு

0
29

சின்னம் முக்கியமல்ல…செயல்தான் முக்கியம்! விவசாயிகள் சங்க நிர்வாகி பேச்சு

சின்னம் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வில் இரட்டை இலைச் சின்னத்திற்காகப் போட்டி போடுவதை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு சின்னம் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. செயல்பாடுதான் தீர்மானிக்கும். பொதுவாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் சின்னம் இருந்தால் நாம் வெற்றி பெற்று விடலாம் என்ற செக்கு மாட்டுச் சிந்தனையும், செம்மறி ஆட்டுப் புத்தியும் இருப்பது பிற்போக்குத்தனமானது மட்டுமின்றி வாக்காளர்களுக்கு வந்த தலை குனிவு. வாக்காளர்களை அவமானம் செய்யும் வகையில் இருக்கிறது.

மக்களின் அறியாமையை நீக்க வேண்டியது ஒரு அரசியல் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் மக்களின் அறியாமையை அறுவடை செய்வதுதான் அரசியல் என்று மாறிவிட்டது. சில அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் கழுதையை நிற்கவைத்தால் கூட வெற்றி பெறுவோம் என்கிறார்கள். அப்படியானால் வாக்காளர்கள் என்ன குட்டிச் சுவரா. இப்படிப்பட்ட சிந்தனையாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும். ஒரு சின்னம் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. செயல்பாடுதான் தீர்மானிக்கும்.

கள் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் என்று நிரூபிப்பவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மக்கள் மத்தியில் அறிவிப்பு செய்து ஆர். கே. நகர் தொகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவார். அவர் தற்போதுள்ள அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here