அமெரிக்காவில் மூளை புற்றுநோய் ஆபரேசன் போது இசைக்கருவி வாசித்த ஆசிரியர்

0
6

அமெரிக்காவில் மூளை புற்றுநோய் ஆபரேசன் போது இசைக்கருவி வாசித்த ஆசிரியர்

நியூயார்க்:

அமெரிக்காவில் நியூயார்க் பகுதியை சேர்ந்தவர் டான் பேப்பியோ. இவர் இசை ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற நியூயார்க்கில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருந்தார். அவருக்கு மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை அகற்ற ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் டான் பேப்பியோ தனக்கு ஆபரேசன் நடைபெறும் போது ‘சாக்சபோன்’ இசைத்து கொண்டிருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அதற்கு டாக்டர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதையடுத்து டாக்டர்கள் குழு மூளையில் ஆபரேசன் செய்து கொண்டிருந்த போது டான் பேப்பரியோ சாக்சபோன் இசை வாசித்து கொண்டே இருந்தார்.

இதற்கிடையே ஆபரேசனை டாக்டர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.

ஆபரேசன் நடந்து கொண்டிருந்தபோது நோயாளி ஒருவர் இசைக் கருவியை வாசித்தபடி இருந்தது அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here