பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ..

0
593

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ..

திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அவர் வெளியிட்ட பொய்யான ஆவணத்தை, அதிமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த ராஜ் சத்யன், அஸ்பையர் ஸ்வாமிநாதன் போன்றோர் தோலுறித்தனர்!

அதோடு, உதயநிதியின் அப்பா ஸ்டாலின், தாத்தா கருணாநிதி ஆகியோரும் பொய்யான தகவல்களைத் தருவதில் கைதேர்ந்தவர்கள் என்பதையும் நினைவுபடுத்தி, பரம்பரை பரம்பரையாக இப்படி பொய் சொல்லியே அரசியல் நடத்துவதை நையாண்டி செய்திருந்தார்கள். இந்நிலையில் உதயநிதி கொடுத்த தகவல் போலியானது, அதிகாரப்பூர்வமற்றது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “தமிழகத்தில் 43 தனியார் மருத்துவர்கள் இறந்ததாக வரும் செய்தி சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கிறது. இந்த செய்தி, இந்திய மருத்துவர் சங்கம், தமிழ்நாடு கிளையின் அதிகாரப்பூர்வமற்ற செய்தி” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக மருத்துவர்கள் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், மருத்துவர்களைப் பயமுறுத்தி, கொரோனா பணிகளில் குழப்பம் ஏற்படுத்த முயன்ற உதயநிதி கூறியுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here